மேக்ஸ்வெல் அடித்த அந்த பந்து.. பவுண்டரி லைனில் பறந்து தடுத்த சூப்பர் மேன் சாம்சன்!

Sanju Samson Fielding: Superman Sanju Samson, Glenn Maxwell’s shot floated in the air and prevented him from crossing the boundary

மேக்ஸ்வெல் அடித்த பந்தை கேரளாவை சேர்ந்த சஞ்சு சாம்சன், சூப்பர்மேன் போல பவுண்டரி லைனில் தாவி தடுத்தார்.

இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளை கொண்ட டி-20 தொடர் நடைபெற்று வருகிறது. 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ள நிலையில், இன்று மூன்றாவது போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி அதிரடியாக ஆடிய மேக்ஸ்வெல் 54 ரன்களும், மத்தேயு வேட் 80 ரன்கள் எடுத்தார்கள். இறுதியாக ஆஸ்திரேலியா அணி, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது.

187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தநிலையில், இந்த போட்டியில் மேக்ஸ்வெல் அடித்த அந்த பந்தை பவுண்டரி லைனில் சூப்பர் மேன் போல பறந்து தடுத்தார். அவர் கேட்ச் பிடிக்காவிட்டாலும், பறந்துக்கொண்டே அந்த பந்தை தடுத்து, போர் கூட செல்லவில்லை.