நெதர்லாந்தில் இந்திய உணவகத்தைத் திறந்தார் சுரேஷ் ரெய்னா.!

முன்னாள் இந்திய கிரிக்கெட்டர் சுரேஷ் ரெய்னா, நெதர்லாந்தில் இந்திய உணவகத்தை திறந்துள்ளார்.

Raina restaurent

முன்னாள் இந்திய கிரிக்கெட்டர் சுரேஷ் ரெய்னா, நெதர்லாந்தில் இந்திய உணவகத்தை திறந்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரரும், ஆல் ரவுண்டருமான சுரேஷ் ரெய்னா கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று கிட்டத்தட்ட ஆண்டுகள் கழிந்தாலும் அவர் மீது ரசிகர்கள் எப்போதும் தங்கள் அன்பை வைத்துள்ளனர். ஐபிஎல்-இல் சென்னை அணிக்காக அவர் நீண்டகாலம் விளையாடியிருந்தார். ரெய்னா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கடந்த 2020ஆம் ஆண்டில் தோனியின் ஓய்வு முடிவை அறிவித்த நாளில் அவரும் ஓய்வை அறிவித்தார்.

ஐபிஎல் தொடரில் கடந்த 2022 ஆம் ஆண்டுக்கான ஏலத்திலும் அவரை எந்த அணியும் வாங்க முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சுரேஷ் ரெய்னா, தற்போது நெதர்லாந்தின் அம்ஸ்டர்டாமில் இந்திய ரெஸ்டாரண்ட்டை திறந்துள்ளார். இந்த புகைப்படத்தை ரெய்னா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

ரெய்னா தனது ட்விட்டரில், நெதர்லாந்தில் இந்த ரெய்னா இந்திய உணவகத்தை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறேன், எனக்கு உணவின் மீதுள்ள அன்பு மற்றும் அதீத விருப்பம் காரணமாக இந்த உணவகத்தை திறந்துள்ளேன். இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளின் சிறந்த உணவுகளை ஐரோப்பிய மக்களின் மனதில் சேர்க்கும் இந்த பயணத்தை இப்போது தொடங்கியுள்ளேன் என ரெய்னா பதிவிட்டுள்ளார்.

unknown node