#T20WorldCupFinal: வில்லியம்சன் அதிரடி.. 173 ரன்கள் அடித்தால் ஆஸ்திரேலியா வெற்றி!

New Zealand set a 173-run target for Australia in the World Cup final.

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு 173 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது நியூசிலாந்து.

ஐசிசி-யின் 7-வது டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும், வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் விளையாடி வருகிறது. துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீர்ரகளான டேரில் மிட்செல் 11 ரன்களிலும், சற்று நிதானமாக விளையாடி வந்த மார்ட்டின் கப்டில் 28 ரங்களிலும் வெளியேறினார்கள். இதன்பின் கேப்டன் கேன் வில்லியம்சன், க்ளென் பிலிப்ஸ் ஜோடி சேர்ந்தது. தொடக்க வீர்ரகள் அவுட்டானதை தொடர்ந்து அதிரடியாக விளையாடிய வில்லியம்சன் அரைசதத்தை கடந்தார்.

க்ளென் பிலிப்ஸ் 18 ரன்களில் ஆட்டமிழக்க, சிறப்பாக விளையாடி வந்த கேன் வில்லியம்சன் 48 பந்துகளில் 85 ரன்கள் அடித்து விக்கெட்டை இழந்தார். இறுதியாக நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன்களை எடுத்து. கோப்பையை கைப்பற்ற 173 ரன்களை வெற்றி இலக்காக ஆஸ்திரேலியா அணிக்கு நிர்ணயம் செய்துள்ளது. ஆஸ்திரேலியா பந்துவீச்சை பொறுத்தளவில் ஜோஷ் ஹேசில்வுட் 3, ஆடம் ஜம்பா 1 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.