INDvENG : முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி

TeamIndia 300/6 at close of play. So that concludes an an exciting day of cricket

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 300 ரன்கள் அடித்துள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார்.இதனால் இந்திய அணி தனது பேட்டிங்கை தொடங்கியது .தொடக்க வீரர்களாக சுப்மன் கில், ரோகித் சர்மா இருவரும் களமிறங்கினர். இதில் சுப்மன் கில், ஒல்லி ஸ்டோன் பந்துவீச்சில் டக் அவுட்டாகி வெளியேறினார்.

பின்னர், இறங்கிய புஜாரா நிதானமாக விளையாடிய வந்த நிலையில் 28 ரன்னில்  வெளியேறினார். அடுத்து இறங்கிய இந்திய அணி கேப்டன் கோலி ரன் எடுக்காமல் டக் அவுட் ஆனார். 3 விக்கெட்டுகளை இழந்தாலும் மறுபுறம் அதிரடியாக ஹிட் மேன் ரோகித் சர்மா விளையாடி வந்தார்.47 பந்துகளில் தனது அரை சதத்தை கடந்தார்.பின் 130 பந்துகளில் தனது 7 வது சதத்தை பதிவு செய்தார் ரோகித். ரோகித் மற்றும் ரகானே ஜோடி  சிறப்பாக விளையாடி அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்தியது.ஒரு புறம் ரகானே அரை சதம் அடித்தார்.மறுபுறம் ரோகித் 150 ரன்கள் அடித்தார்.சிறிது நேரத்தில் ரோகித் 161 ரன்களில் ஆட்டமிழந்தார்.இவரைத்தொடர்ந்து ரகானே 67 ரன்கள்,அஸ்வின் 13 ரன்களில்  ஆட்டமிழந்தார்கள்.தற்போது முதல் ஆட்ட நேரம் முடிவடைந்துள்ளது.88 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்கள் அடித்துள்ளது. களத்தில் பண்ட் 33 ரன்களுடனும், அக்சார் 5 ரன்களுடனும் உள்ளனர்.இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் லீச் ,அலி ,  தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.