நேற்று தோனி ஆடிய ஆட்டத்தை ஜியோ சினிமாவில் 1.7 கோடி ரசிகர்கள் பார்வையிட்டு வரலாறு படைத்துள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரின் சிஎஸ்கே மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற போட்டியில் தல தோனி இறுதியில் இறங்கி, மார்க் வுட் வீசிய பந்தில் இரண்டு சிக்ஸர்களை அடித்து பறக்கவிட்டார். அடுத்த பந்திலும் சிக்ஸர் அடிக்க முற்பட்டு கேட்ச் ஆகி அவுட் ஆனார் தோனி.
இந்த நிலையில் நேற்று தோனி ஆடிய 3 பந்துகள் ஆட்டம், ஐபிஎல் தொடரின் அதிகாரபூர்வ டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம் பெற்ற, ஜியோ சினிமாவில் 1.7 கோடி ரசிகர்கள் பார்வையிட்டுள்ளனர். இது ஐபிஎல் 2023 இல் இதுவரை அதிக பார்வையாளர்கள் பார்வையிட்ட போட்டியாக உள்ளது. இதற்கு முன்பாக 1.6 கோடி பேர் பார்வையிட்டதே இதுவரை சாதனையாக இருந்துவந்தது.
இது சிஎஸ்கே மற்றும் குஜராத் அணிக்கு இடையேயான முதல் போட்டியில் தோனியின் இன்னிங்ஸின் போது பார்க்கப்பட்டது. இந்த சாதனையை தற்போது தோனியின் 3 பந்துகளில் 12 ரன்கள் அடித்த ஆட்டம் முறியடித்துள்ளது.
unknown node