#BGT2023: ஆஸ்திரேலியாவை தோற்கடித்து வெற்றி வாகை சூடியது இந்தியா..!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் தொடரில் விளையாடிவருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் நிலையில் டெல்லியில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.

unknown node

தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய உஸ்மான் கவாஜா ஒற்றை இலக்க ரன் எடுத்து ஆட்டமிழந்தார். டிராவிஸ் ஹெட் (43) மற்றும் மார்னஸ் லாபுசாக்னே (35) அதிக ரன்கள் எடுத்தனர். இறுதியில் ஜடேஜாவின் அசாத்திய பவுலிங்கில் ஆஸ்திரேலியா 113 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து ஆல் அவுட் ஆனது. இதனால் 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியுள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் களமிறங்கினர். ரோஹித் சர்மா 31 ரன்கள் எடுத்த நிலையில் ரன்ஆட்டமிழந்தார்.

unknown node

புஜாரா (31*) மற்றும் ஸ்ரீகர் பாரத் (23* ரன்கள்) ஆட்டம் இறுதி வரை களத்தில் இருந்தனர். 2-ஆவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த 115 ரன்கள் இலக்கை இந்திய அணி 26ஆவது ஓவரில் கடந்தது. இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் 118 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணியை வென்றது. இந்த போட்டியின் சிறந்த வீரராக ரவீந்திர ஜடேஜா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்பொழுது 4 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0க்கு என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.