கோவை அணி வீரர் ஷாருக் கான், மதுரை அணிக்கு எதிராக விளையாடியபோது ஒரு கையால் கேட்ச் பிடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த ஆண்டிற்கான டிஎன்பிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், போட்டிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் சீசெம் மதுரை பாந்தர்ஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகள் திருநெல்வேலியில் உள்ள இந்தியன் சிமெண்ட் கம்பெனி கிரிக்கெட் மைதானத்தில் மோதியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் பேட் செய்ய களமிறங்கிய கோவை அணி வீரர்கள் அதிரடியாக விளையாடி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் குவித்தனர். இதில் சுரேஷ் குமார், சச்சின் மற்றும் ஷாருக்கான் ஆகியோர் அரைசதம் அடித்து அசத்தினர்.
இதையடுத்து, 209 ரன்கள் என்ற இலக்குடன் மதுரை அணி களமிறங்கியது. முடிவில், மதுரை அணி 18 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 164 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் கோவை அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
போட்டியின் நடுவே, 33 ரன்களுடன் விளையாடிவந்த ஹரி நிஷாந்த் அடித்த பந்தை, கோவை அணியின் கேப்டன் மற்றும் ஆல்-ரவுண்டர் ஷாருக் கான் ஒரு கையால் அட்டகாசமான கேட்ச் பிடித்து, ஹரி நிஷாந்தின் விக்கெட்டை எடுத்தார். தற்பொழுது, ஷாருக் கான் கேட்ச் பிடிக்கும் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
unknown node