சர்வதேச டெஸ்ட் தரவரிசை பட்டியலில் பின்னுக்கு சென்ற இந்திய அணி.!

The Indian team was pushed to fourth place in the rankings for the International Test Championship.

சர்வதேச டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான தரவரிசை பட்டியலில் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டது இந்திய அணி.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் கடந்த 5-ம் தொடங்கிய நிலையில், இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 13 சென்னையில் தொடங்குகிறது என்பது குறிப்பிடப்படுகிறது.

இதனிடையே, சர்வதேச டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணி நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே, 118 ரேட்டிங்கியுடன் இரண்டாவது இடத்தில் இருந்த இந்தியா அணி தற்போது நான்காவது இடத்தில் பின்தங்கி இருக்கிறது. இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதால் 442 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு இங்கிலாந்து முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node