சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் புதிய பெவிலியனை முதல்வர் ஸ்டாலின் மார்ச் 17 ஆம் தேதி திறந்து வைக்கிறார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் கட்டுமான புதுப்பிப்பு பணிகள் முடிவடைந்து, வரும் மார்ச் 17 இல் முதல்வர் ஸ்டாலின் மைதானத்தின் புதிய பெவிலியனை திறந்து வைக்கிறார். சென்னை சேப்பாக்கம் மைதானம் 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக புதுப்பிக்கப்பட்டது அதன்பிறகு தற்போது மேலும் 5000 இருக்கைகள் புதுப்பிப்பு பணியில் மேற்கொள்ளப்பட்டது.
தற்போது சேப்பாக்கம் மைதானம் 5,306 இருக்கைகள் அதிகரித்து 31,140 இருக்கைகளுடன் தயாராகிவிட்டது. மைதானத்தின் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்ததால் சர்வதேச போட்டிக்கும் சேப்பாக்கம் தயாராகிவிட்டது. இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 3-வது ஒருநாள் போட்டி சேப்பாக்கத்தில் வரும் மார்ச் 22 ஆம் தேதி நடைபெறுகிறது, அதற்கு முன்னதாக முதல்வர் ஸ்டாலின் இதனை மார்ச் 17 இல் திறந்து வைக்கிறார்.