வார்னர் ஆமை வேகத்தில் ஆடியது தான் தோல்விக்கு காரணம் – வீரேந்திர சேவாக்..!!

Default Image

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ஆமை வேகத்தில் வார்னர் ஆடியது தான் தோல்விக்கு காரணம் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கூறியுள்ளார். 

ஐபிஎல் தொடரின் 23 வது லீக் போட்டியில்  சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்தது. அந்த படி முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி  20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தனர். அடுத்ததாக 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 18.3 ஓவர்களில் 173 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெற்றியை தொடர்ந்து புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.

இந்த போட்டியில் ஹைதராபாத் அணி தோல்வியடைந்தது குறித்து ஊடகத்திற்கு பேட்டியளித்த  இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கூறியது ” சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மிகவும் மோசமாக விளையாடி வருகிறது. அணியின் கேப்டன் டேவிட் வார்னர் செயல்பாடு மிகவும் மோசமாக உள்ளது. சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 55 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார், அதிரடியாக விளையாடக்கூடிய அவர் எந்த தயக்கமும் இல்லாமல் விளையாட வேண்டும்.

வார்னர் ஆமை வேகத்தில் விளையாடியது தான் தோல்விக்கு காரணம். கேப்டனாக வார்னரின்  செயல்பாடு கடந்த காலங்களில் சரியாக இல்லை. அவர் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும், சென்னை அணிக்கு எதிரான போட்டியில் அதை தவறவிட்டுவிட்டார். எனக்கு தெரிந்து டேவிட் கேன் வில்லியம்சனுக்கு கேப்டன் பொறுப்பை கொடுக்கலாம்” என்றும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

ind vs pak war Donald Trump
ind vs pak war
IndiaPakistanWarUpdates
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war