2-வது டெஸ்ட் போட்டி:தொடங்குவதில் தாமதம்;இஷாந்த்,ரஹானே,ஜடேஜா விலகல் – இதுதான் காரணமா?..!

Default Image

மும்பை:இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி இன்று காலை 9.30 மணிக்கு தொடங்க இருந்த நிலையில் தாமதமாகியுள்ளது.

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.இந்தியா -நியூசிலாந்து ஆகிய இரு அணிகள் இடையே 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது.அதன்படி,முதலில் நடைபெற்ற 20 ஓவர் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்து தொடரை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து, 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் கான்பூரில் நடந்த முதல் டெஸ்ட் டிரா ஆனது.

இந்த நிலையில்,இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையே 2-வது(கடைசி) டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்க இருந்த நிலையில்,மோசமான மைதானம் காரணமாக டாஸ் இப்போதைக்கு நடக்காது என்றும், காலை 10:30 மணிக்கு மீண்டும் மைதான ஆய்வு நடைபெறும் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

20 ஓவர் தொடர் மற்றும் முதல் டெஸ்டுக்கு ஓய்வு கொடுக்கப்பட்ட கேப்டன் விராட் கோலி இன்றைய டெஸ்டில் போட்டியில் விளையாடுகிறார்.அதன்படி, புஜாராவுக்கு பதிலாக கோலி களமிறங்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.மேலும்,காயம் காரணமாக 2வது டெஸ்டில் இருந்து இஷாந்த் சர்மா,அஜிங்க்யா ரஹானே, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் வெளியேறியுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

அதேசமயம்,நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் இடது முழங்கை காயம் காரணமாக இரண்டாவது டெஸ்டில் பங்கேற்கவில்லை என்ற செய்தியை நியூசிலாந்து கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

முதல் டெஸ்டில் இந்திய அணி வெற்றி வாய்ப்பை இழந்ததால் இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Vikram Misri
ind vs pak war Donald Trump
ind vs pak war
IndiaPakistanWarUpdates
Donald Trump
Indian Army