ஆஸ்திரேலியாவின் பெலிண்டா கிளார்க், வெண்கலச் சிலையைப் பெற்ற உலகின் முதல் பெண் கிரிக்கெட்டர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
ஆஸ்திரேலிய மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் பெலிண்டா கிளார்க்கிற்கு சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் வெண்கலச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வெண்கலச்சிலை திறந்து வைக்கப்பட்டதன் மூலம், வெண்கலச்சிலை அமைக்கப்பெற்ற உலகின் முதல் பெண் கிரிக்கெட்டர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் ஏற்கனவே அமைந்துள்ள ரிச்சி பெனாட், ஸ்டீவ் வாக், ஸ்டான் மெக்கேப் மற்றும் ஃப்ரெட் ஸ்போர்த் ஆகியோரின் சிலையுடன் தற்போது பெலிண்டா கிளார்க்கின் சிலையும் திறக்கப்பட்டுள்ளது. பெலிண்டா கிளார்க், ஆஸ்திரேலிய அணிக்காக 5 டெஸ்ட் மற்றும் 118 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.