INDvsENG: நாளை தொடங்குகிறது இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாம் டெஸ்ட்.. வெற்றிபெறுமா இந்தியா?

The third Test of the four-Test series between India and England starts tomorrow in Ahmedabad new ground, which was the biggest ground in World

இந்திய – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் மூன்றாம் டெஸ்ட் போட்டி, நாளை அஹமதாபாத்தில் தொடங்கவுள்ளது.

இந்திய – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டிகள் சென்னையில் நடைபெற்று முடிந்தது. டெஸ்ட் தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளது.

இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாம் டெஸ்ட் போட்டி, நாளை அஹமதாபாத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக இரு அணிகளுக்கு அஹமதாபாத் புறப்பட்டு சென்று, தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கிலாந்து அணியை சேர்ந்த சாம் கரண், 4 ஆம் டெஸ்ட் போட்டியிலும் கலந்துகொள்ள வாய்ப்புகள் குறைவு என இங்கிலாந்து அணி தெரிவித்துள்ளது.