இந்த பயிற்சியாளர்கள் தான் வேணும் ....கேட்டு வாங்கிய கம்பீர்? வெளியான தகவல் ..!

கவுதம் கம்பீர் : இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கம்பீர் இந்த பயிற்சியாளர்கள் தான் இந்திய அணிக்கு வேண்டும் என்று கேட்டு கொண்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

Gautam Gambhir , Indian Head Coach

கவுதம் கம்பீர் :இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கம்பீர் இந்த பயிற்சியாளர்கள் தான் இந்திய அணிக்கு வேண்டும் என்று கேட்டு கொண்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் சமீபத்தில் பதவி ஏற்றார். இதன் காரணமாக அவருக்கு பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும்,  இந்த மாதம் இறுதியில் நடைபெற இருக்கும் இலங்கை அணியுடனான சுற்று பயண தொடர் தான் கவுதம் கம்பீர் பயிற்சியாளராக பணியாற்ற போகும் முதல் தொடராகும்.

இதற்கான தயாரிப்பில் கவுதம் கம்பீர் தற்போது ஈடுபட்டு கொண்டு வருகிறார். இந்நிலையில், கம்பீர் பந்து புதிதாக நியமிக்கப்பட்ட இந்திய தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர், முன்னாள் நெதர்லாந்து கிரிக்கெட் வீரரான ரியான் டென் டோஸ்கேட்டை அணியின் பயிற்சியாளர் குழுவில் சேர்க்க பிசிசியிடம் வலியுறுத்தி வருவதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

மேலும், ரியான் டென் டோஸ்கேட் சமீபத்தில் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் பீல்டரிங் பயிற்சியாளராக பணிபுரிந்தவர் ஆவார். அதே அணிக்கு கம்பீர் அப்போது ஆலோசகராக செயலாற்றினார். மேலும், இந்திய அணிக்கு ஒரு நெதர்லாந்து வீரர் பயிற்சியாளராக பணிபுரிவதற்கு பிசிசிஐ சம்மதிக்குமா என்று பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும்.

அதே நேரம், பந்து வீச்சு பயிற்சியாளராக வினைகுமார் அல்லது தென்னாபிரிக்கா அணியின் முன்னாள் வீரரான மோர்னே மோர்கலையும், பேட்டிங் பயிற்சியாளராக அபிஷேக் நாயரையும் பயிற்சியாளராக தனக்கு வேண்டும் என கம்பீர் கேட்டுக் கொண்டதாக தகவல் பரவி வருகிறது. இந்த மாத இறுதியில் இந்திய அணி இலங்கைக்கு சுற்று பயணம் மேற்கொள்ள உள்ளது, அதனால் தனிப்பட்ட பயிற்சியாளருக்கான அதிகாரபூர்வ அறிவிப்பை பிசிசிஐ உடனே அறிவிப்பார்கள் என ரசிகர்களால் எதிர்ப்பார்க்கப்படுகிறது.