புதுப்பிக்கப்பட்ட சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுவது, சுவிட்சர்லாந்தில் விளையாடுவது போல் உணர்வதாக தோனி நெகிழ்ச்சி.
ஐபிஎல் தொடரின் 17-வது போட்டியாக இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள், சென்னையின் சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுகின்றன. இந்த போட்டி தல தோனிக்கு கேப்டனாக சிஎஸ்கே அணியில் 200-வது போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி, புதுப்பிக்கப்பட்ட சேப்பாக்கம் மைதானம் பற்றி பேசுகையில், இந்த சேப்பாக்கம் மைதானத்தில் இப்போது விளையாடுவது, சுவிட்சர்லாந்தில் விளையாடுவது போல் உணர்கிறேன் என்றார். நாங்கள் பழைய சேப்பாக்கம் ஸ்டேடியத்தில்விளையாடியுள்ளோம், அது மிகவும் சூடாகவும், ஈரப்பதமாகவும் இருந்தது.
ஆனால் தற்போது உள்ள மைதானத்தில் விளையாடுவது சுவிட்சர்லாந்தில் இருப்பது போல உள்ளது, மேலும் சேப்பாக்கத்தில் ரசிகர்களும் நிறைந்திருக்க, பார்ப்பதற்கே மகிழ்ச்சியாக உள்ளது என்றும் தொடர்ச்சியாக விளையாட முடிவதை நினைத்தும் மகிழ்ச்சியாக இருப்பதாக தோனி நெகிழ்ச்சியாக கூறினார்.
முன்னதாக இன்றைய போட்டியில் டாஸ் வென்ற தோனி, முதலில் பந்துவீசப் போவதாக அறிவித்தார். இதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி,20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் குவிந்திருந்தது. 176 ரன்கள் வெற்றி இலக்குடன் சென்னை அணி களமிறங்கி விளையாடிவருகிறது.