ஐபிஎல் தொடரில் விளையாடிய முதல் தந்தை-மகன் காம்போ இதுதான்!

ஐபிஎல் தொடரில் விளையாடிய முதல் தந்தை-மகன் காம்போ என்ற பெருமையை பெற்ற சச்சின் டெண்டுல்கர் மற்றும் அர்ஜுன் டெண்டுல்கர்.

ஐபிஎல் தொடரில் விளையாடிய முதல் தந்தை-மகன் காம்போ என்ற பெருமையை பெற்ற சச்சின் டெண்டுல்கர் மற்றும் அர்ஜுன் டெண்டுல்கர்.

ஐபிஎல் 16-வது சீசன் 22-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் நேற்று மோதின. முதலில் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மளமளவென விக்கெட்டுகளை விட்டு தடுமாறினர். இருப்பினும், மறுபக்கம் வெங்கடேஷ் ஐயர் அதிரடியாக விளையாடி, இறுதியில் 51 பந்துகளில் 6 பவுண்டரி, 9 சிக்ஸர்கள் உட்பட 104 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

அர்ஜுன் டெண்டுல்கர் அறிமுகம்:

unknown node

இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 185/6 ரன்களை குவித்து அசத்தியது. இருந்தாலும், மும்பை அணி அதிரடியாக விளையாடி 5 விக்கெட் வித்தியாசத்தில் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. இதனிடையே, சுவாரசியம் என்னவென்றால், நேற்று கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் விளையாடினார். இப்போட்டியின் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார் அர்ஜுன் டெண்டுல்கர்.

சச்சின் அறிவுரை:

அறிமுகமானது மட்டுமில்லாமல் 2  வீசி 17 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார். அர்ஜுன் டெண்டுல்கருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்த நிலையில், தந்தை சச்சின் டெண்டுல்கரும் வாழ்த்து கூறி வழங்கினார். அதாவது, இன்று நீங்கள் ஒரு கிரிக்கெட் வீரராக உங்கள் பயணத்தில் மற்றொரு முக்கியமான படியை எடுத்துள்ளீர்கள். விளையாட்டுக்கு உரிய மரியாதையை நீங்கள் தொடர்ந்து வழங்குவீர்கள்.

unknown node

மேலும், விளையாட்டு உங்களை மீண்டும் நேசிக்கும் என்பதை நான் அறிவேன். நீங்கள் இங்கு வருவதற்கு மிகவும் கடினமாக உழைத்துள்ளீர்கள். உன்னுடைய கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி இது. நீங்கள் தொடர்ந்து செய்வீர்கள் என்று நான் நம்புகிறேன். இது ஒரு அழகான பயணத்தின் ஆரம்பம் வாழ்த்துக்கள்  என சச்சின் டெண்டுல்கர் உருக்கமாக பதிவிட்டிருந்தார்.

இதுதான் முதல் காம்போ:

unknown node

இந்த நிலையில், ஐபிஎல் வரலாற்றில் தந்தையும், மகனும் ஐபிஎல் அணிக்காக விளையாடிவர்கள் என்ற சாதனையை அர்ஜுன் டெண்டுல்கர், சச்சின் டெண்டுல்கர் இருவரும் படைத்துள்ளனர். ஐபிஎல் தொடரில் விளையாடிய முதல் தந்தை-மகன் காம்போ இதுதான். 23 வயதாகும் அர்ஜுன் டெண்டுல்கர் கடந்த 2018-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் யு-19 இந்திய அணிக்காக அறிமுகமானார்.

முதல் முறையாக மும்பை அணிக்கு:

unknown node

கடந்த 2021-ம் ஆண்டிலேயே ஐபிஎல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி இவரை வாங்கி இருந்த போதிலும், நேற்றைய போட்டியில் தான் முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அர்ஜுன் டெண்டுல்கர் பந்துவீச்சாளராக களம் இறங்கினார். இந்தப் போட்டியை காண சச்சின் டெண்டுல்கர், அவரது மனைவி அஞ்சலி, மகள் சாரா டெண்டுல்கர் உள்ளிட்டோர் வந்திருந்த நிலையில், இரண்டு ஓவர்கள் மட்டுமே பந்து வீச அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.