TNPL 2023 Live: நெல்லை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி..!

இந்த ஆண்டிற்கான டிஎன்பிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி இன்று இரண்டாவது தகுதி சுற்று போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ்

NRK vs DGD Live

இந்த ஆண்டிற்கான டிஎன்பிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி இன்று இரண்டாவது தகுதி சுற்று போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் சேலத்தில் உள்ள எஸ்சிஎஃப் கிரிக்கெட் மைதானத்தில் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற நெல்லை பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய திண்டுக்கல் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 185 ரன்கள் எடுத்துள்ளது. இதன்பின், 186 ரன்கள் என்ற வெற்றி இலக்கில் களமிறங்கிய நெல்லை அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் எடுத்தது. இதனால் நெல்லை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணியை வென்றது.