TNPL 2023 Live: நெல்லை அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..!

இந்த ஆண்டிற்கான டிஎன்பிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி இன்று எலிமினேட்டர் சுற்று போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ்

NRK vs MADURAI eliminator

இந்த ஆண்டிற்கான டிஎன்பிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி இன்று எலிமினேட்டர் சுற்று போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் சீசெம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் சேலத்தில் உள்ள எஸ்சிஎஃப் கிரிக்கெட் மைதானத்தில் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதன்படி, முதலில் களமிறங்கிய நெல்லை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்கள் எடுத்துள்ளது. இதன்பின், 212 ரன்கள் என்ற வெற்றி இலக்கில் களமிறங்கிய மதுரை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் நெல்லை அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் நெல்லை அணி இரண்டாவது தகுதிச்சுற்றிற்கு முன்னேறியுள்ளது. அந்த சுற்றில் போட்டியிடும் திண்டுக்கல் மற்றும் நெல்லை அணியில், வெற்றி பெரும் அணி இறுதி போட்டிக்கு தேர்வாகி, கோவை அணியுடன் மோதும்.