7-வது சீசன் டிஎன்பிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சேலம் ஸ்பார்டன்ஸ் மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகள் சேலத்தில் உள்ள எஸ்சிஎஃப் கிரிக்கெட் மைதானத்தில் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற சேலம் ஸ்பார்டன்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இதன்படி, முதலில் களமிறங்கிய கோவை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் எடுத்துள்ளது. அதன்பின், 200 ரன்கள் என்ற இலக்கில் களமிறங்கிய சேலம் அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 120 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் லைகா கோவை கிங்ஸ் அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
