#INDvENG: இன்று இறுதிப்போட்டி.. தொடரை வெல்லப்போவது யார்? கடும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

The 3rd and final ODI between India and England today. Will India will capture the series? England? Fans have been eagerly awaiting

இந்தியா – இந்தியா அணிகளுக்கு இடையிலான 3 ஆம் மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இதில் வென்று தொடரை கைப்பற்றுவது இந்தியாவா? இங்கிலாந்தா? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி, முதலில் 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கிலும், 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை 3-2 என்ற கணக்கிலும் இந்தியா கைப்பற்றியது. தற்பொழுது 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வரும் நிலையில், முதல் போட்டியில் இந்திய அணியும், இரண்டாம் போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றிபெற்று 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.

இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி புனேவில் தொடங்கவுள்ளது. இந்தியா – இங்கிலாந்து இவ்விரு அணிகளுக்கும் இதுவே கடைசிப்பொடி என்பதால் இரு அணிகளும் தீவிரமாக பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. டெஸ்ட், 20 ஓவர் தொடரைக் கைப்பற்றியது போல் ஒருநாள் தொடரையும் கைப்பற்றவேண்டும் என இந்தியா உள்ளது.

அதேபோல, ஒரு தொடரையாவது கைப்பற்றி வெற்றிபெற வேண்டும் என இங்கிலாந்து அணி காத்திருக்கின்றது. இதனால் இன்றைய போட்டி சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.