ட்விட்டர் தளத்தில் தோனியின் புகைப்படத்தை மாற்றி மரண மாஸ் மரியாதை செய்த ஐசிசி!!

மகேந்திர சிங் தோனி கடந்த ஒரு வருடமாக சரியாக ரன்கள் குவிக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டித்தொடரில் அடுத்தடுத்து

மகேந்திர சிங் தோனி கடந்த ஒரு வருடமாக சரியாக ரன்கள் குவிக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டித்தொடரில் அடுத்தடுத்து அரைசதம் அடித்து ரசிகர்களையும் கிரிக்கெட் உலகத்தையும் அதிரவைத்தார். மீண்டும் தனது பணிக்கு திரும்பியுள்ள தோனிக்கு பலதரப்பிலிருந்தும் பாராட்டுகள் வந்த நிலையில் தற்போது ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் தனது கவர் புகைப்படத்தை மாற்றியு அவருக்கு மரியாதை செலுத்தி உள்ளது.

ஐ.சி.சி. ட்விட்டர் கவர் பக்கத்தில் வைக்கப்பட்டுள்ள டோனியின் படத்தை அவரது ரசிகர்கள் பதிவேற்றம் செய்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். ஐ.சி.சி.க்கு தங்களது பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.