U-19 Women's WC: மகளிர் கிரிக்கெட்டில் முதல் ஐசிசி பட்டம் வென்றது இந்தியா!

ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்

ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது இந்திய அணி.

19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான ஐ.சி.சி டி20 உலக கோப்பை கிரிக்கெட் முதல் சீசன் தென் ஆப்ரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று நிறைவு பெற்றது. போட்செப்ஸ்ட்ரூமில் நடந்த 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஷபாலி வர்மா ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியின் அபார பந்துவீச்சால் 17.1 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்து 68 ரன்கள் மட்டுமே எடுத்து இங்கிலாந்து மகளிர் அணி. இந்தியா சார்பில் திதாஸ், அர்ச்சனா, பார்ஷவி தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

இந்த சமயத்தில் 120 பந்துகளுக்கு 69 ரன்கள் மட்டும் எடுத்தாலே வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய மகளிர் அணி 14 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 69 ரன் எடுத்து வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. பெண்கள் கிரிக்கெட்டில் இந்திய அணி இதுவரை எவ்வித உலக கோப்பையும் வென்றது இல்லை.

இந்த நிலையில், நேற்று இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் ஷபாலி வர்மா தலைமையிலான இளம் இந்திய அணி முதன் முறையாக உலக கோப்பை வென்று புதிய வரலாறு படைத்தது. இதனிடையே, .சி.சி டி20 உலக கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய ஜூனியர் மகளிர் அணிக்கு ரூ.5 கோடி பரிசு அறிவித்திருந்தார் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா.