U19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் சிக்ஸ் சுற்றின் முதல் ஆட்டத்தில் இன்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 295 ரன்கள் குவித்தது.
அந்த அணியின் முஷீர் கான் அபாரமாக விளையாடி 131 ரன்கள் குவித்தார். இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி இந்திய வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. தொடர்ந்து 28.1 ஓவர்களில் 81 ரன்களுக்கு அந்த அணி ஆல் அவுட் ஆனது. இதை தொடர்ந்து இந்திய அணி 214 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
#U19WC2024 : 296 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்திய அணி ..!
இந்திய அணி சார்பில் சவுமி பாண்டே 4 விக்கெட்களை வீழ்த்திய நிலையில் முஷீர் கான் 2 விக்கெட்களை வீழ்த்தினார். இப்போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் ஜொலித்த முஷீர் கான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
unknown node