விராட் கோலியின் பொய்யான ஃபீல்டிங் த்ரோ, நடுவர்கள் கவனிக்க தவறியதால் தப்பிய இந்தியா.!

டி-20 உலகக்கோப்பையில் இந்தியா-வங்கதேசம் போட்டியின் போது விராட் கோலியின் பொய்யான ஃபீல்டிங் த்ரோ(Fake Fielding Throw) குறித்து வெளியாகியுள்ள பிரச்சனை சர்ச்சையை

டி-20 உலகக்கோப்பையில் இந்தியா-வங்கதேசம் போட்டியின் போது விராட் கோலியின் பொய்யான ஃபீல்டிங் த்ரோ(Fake Fielding Throw) குறித்து வெளியாகியுள்ள பிரச்சனை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டி-20 உலகக்கோப்பையில் சூப்பர்-12 போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேசம் மோதிய ஆட்டத்தில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்த போட்டியில் இரண்டாவது பேட் செய்த வங்கதேச அணி மழையால் ஆட்டம் தடை பெறுவதற்கு முன் வரை இந்தியாவின் பந்துவீச்சை அடித்து நொறுக்கி வந்தது.

7 ஒவர்களுக்கு 66/0 என்ற நிலையில் மழைக்கு பிறகு ஆட்டம் இந்தியாவின் பக்கம் திரும்பியது. ஆட்டத்தின் 7 ஆவது ஓவரில் (மழைக்கு முன்) வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான லிட்டன் தாஸ் மற்றும் நஸ்முல் ஹூசெய்ன் 2ஆவது ரன்னிற்கு ஓடும்போது விராட் கோலி, பந்து கையில் இல்லாமல் போலியாக எறிவது (த்ரோ) போன்று சைகை செய்துள்ளார்.

ஐசிசியின் 41.5.1 விதிகளின்படி இது பேட்ஸ்மேன்களை கவனம் சிதறச்செய்தல் விதிமீறல் மற்றும் பேட்டிங் அணிக்கு பெனால்டியாக 5 ரன்கள் வழங்கப்பட வேண்டும். வங்கதேச அணியின் கீப்பர் பேட்ஸ்மேன் நூருல் ஹசன் இதனை சுட்டிக்காட்டி  கூறியுள்ளார். ஆனால் நடுவர்கள் யாரும் இதை கவனிக்காததால் வங்கதேசத்திற்கு பெனால்டி ரன்கள் வழங்கப்படவில்லை.

ஒருவேளை நடுவர்கள் கோலியின் செயல்களை கவனித்திருந்தால் 5 ரன் பெனால்டியுடன் அந்த பந்து “டெட் பால்” என அறிவிக்கப்பட்டிருக்கும், மேலும் இந்த சம்பவம் மழை வருவதற்கு முன் நடந்திருக்கிறது, இதனால் வங்கதேசம் வென்றிருக்குமா என்றால் அது கேள்விக்குறி தான். ஆட்டம் யார் பக்கம் வேண்டுமானாலும் திரும்பியிருக்கலாம்.

நடுவர்களின் இந்த கவனக்குறைவு குறித்து வங்கதேச கிரிக்கெட் வாரியம், இந்த பிரச்சனையை நாங்கள் விடமாட்டோம் என்று கூறியுள்ளது. மேலும் வங்கதேச அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தான் இந்தியாவிடம் தோற்றது.

unknown node