விடாமல் துரத்தும் விராட்…டெஸ்டில் புதிய சாதனை படைக்க காத்திருப்பு!!

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 11 ரன்கள் அடிப்பதன் மூலமாக விராட்கோலி தனது புதிய சாதனையை நிகழ்த்த உள்ளார்.
இந்திய அணியிண் கேப்டன் விராட் கோலி அதிரடியான மற்றும் சாமர்த்தியமான ஆட்டத்தை ஆடுகளத்தில் வெளிபடுத்தி அசத்துபவர்.மேலும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறார். அதே போல் ஒருநாள் போட்டிகளில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் சாதனைகளை நெருங்கி வந்துகொண்டு இருக்கிறார்.
இந்நிலையில் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் அதிக சமதமடித்தவர்கள் பட்டியலில் முன்னாள் கேப்டன் கங்குலியை பின்னுக்கு தள்ள உள்ளார். இந்த சாதனையை விராட் நியூசிலாந்துக்கு எதிராக நடக்கவிருக்கும் முதலாவது டெஸ்ட் போட்டியில் 11 ரன்கள் அடிப்பதன் மூலம் அதிக டெஸ்ட் சதமடித்த இந்தியர்களின் பட்டியலில் ஆறாவதாக உள்ள கங்குலியை பின்னுக்கு தள்ளுகிறார்.
இந்த பட்டியலில் தொடர்ந்து முதலாவது இடத்தில் சச்சின் (15921) உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இவரை தொடர்ந்து ட்ராவிட்(13265), கவாஸ்கர்(10123), லக்ஷ்மணன்(8781) , சேவாக்(8503 )கங்குலி(7212) ஆகியோர் அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர்.இந்த பட்டியலில் தற்போது விராட் கோலியும் இணைய உள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!
June 22, 2025
“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!
June 22, 2025