தோனி செய்துள்ள விஷயங்களால் ரசிகர்களின் அன்பை பெற்றுள்ளார் என மும்பை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பொல்லார்ட் புகழாரம்.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் சென்னை – மும்பை அணிகளுக்கிடையேயான முதல் போட்டி இன்று மாலை மும்பை வான்கடே மைதானத்தில் ரசிகர்கள் ஆரவாரத்துடன் நடைபெற உள்ளது. சென்னை – மும்பை என்றாலே, இந்தியா – பாகிஸ்தான் போட்டி போன்று பார்க்கப்படும், டிஆர்பி ரேட்டிங், வியூஸ் தெறிக்கவிடும். அப்படிப்பட்ட எல்-கிளாசியோ போட்டி ஓன்று மாலை எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற உள்ளது.
பொல்லார்ட் புகழாரம்:
unknown nodeஇதில் குறிப்பாக சென்னை அணியில் பிராவோ, மும்பை அணியில் பொல்லார்ட் இரு வீரர்களும் தற்போது பயிற்சியாளர்களாக மோதுகின்றன. இந்த நிலையில், சென்னை – மும்பை பிளாக்பஸ்டர் மோதலுக்கு முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மும்பை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கைரன் பொல்லார்ட், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனிக்கு நாடு முழுவதும் பெரும் ஆதரவாளர்கள் இருப்பது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
ரசிகர்களின் அன்பு:
unknown nodeஅதாவது அவர் கூறுகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ். தோனிக்கு சேப்பாக்கத்தில் எந்த அளவுக்கு ஆதரவு இருக்குமோ, அதே அளவுக்கு ஆதரவு, நடப்பு ஐபிஎல் சீசனில், வேறு எந்த மைதானத்தில் விளையாட சென்றாலும் அவருக்கும், அவரது அணிவிக்கும் இருக்கும். ஏனென்றால், அவர் செய்துள்ள விஷயங்களால் ரசிகர்களின் அன்பை பெற்றுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியில் சச்சின் டெண்டுல்கர் இருந்தபோது, இதே போல் இந்தியாவில் நாங்கள் எங்கு சென்றாலும் அணிக்கு ஆதரவு இருக்கும் என்றுள்ளார்.
டெண்டுல்கர் – தோனி:
unknown nodeபல ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் டெண்டுல்கர் இருந்தபோது அதை உணர்ந்தோம். நாங்கள் இந்தியா முழுவதும் எங்கு சென்றாலும், எங்களுக்கு அந்த ஆதரவு இருந்தது. இப்போது தோனியை பார்க்கும்போது அதை உணர்கிறோம். எம்எஸ் தோனியும், டெண்டுல்கரும் களம் இறங்கும் போதெல்லாம் பெரும் கூட்டத்தை இழுப்பவர்களாக அறியப்படுகிறார்கள். போட்டி நடைபெறும் இடத்தைப் பொருட்படுத்தாமல், ஒருசில கிரிக்கெட் வீரர்களால் மட்டுமே கூட்டத்தை வெறிபிடிக்கச் செய்ய முடியும். இதுவே இரு கிரிக்கெட் ஜாம்பவான்களின் தாக்கம் என புகந்துள்ளார்.