இன்றைய போட்டியில் மீண்டு வருமா இந்திய அணி..?

The second ODI between India and Australia is scheduled for today. The match is set to take place at the Sydney Stadium in Sydney.

இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டி சிட்னியில் உள்ள சிட்னி மைதானத்தில் நடைபெற உள்ளது. இன்று காலை 09.10 மணிக்கு தொடங்கவுள்ளது. இதற்கு முன் நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்றது.

இந்நிலையில், இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்புடன் இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணியும் களமிறங்கியுள்ளது. இன்று நடைபெறும் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றால் ஒருநாள் தொடரை கைப்பற்றிவிடும்.

முதல் போட்டியில் இந்திய அணி தோல்விக்கு காரணம் சரியாக ஐந்து பந்துவீச்சாளர்களை மட்டுமே அணியில் தேர்வு தான் எனவும் பும்ரா, சைனி மற்றும் சாஹல் ஆகியோர் ஓவரிகளில் ரன் குவித்தபோது, இந்திய அணியில் புதிய பந்துவீச்சாளரை பந்து வீச பந்துவீச்சாளர் இல்லை என பலர் கருத்து தெரிவித்தனர். இதனால், இன்றைய போட்டியில் புதியதாக ஒரு பந்து வீச்சாளர் இடம்பெறுவாரா என்பது போட்டி தொடங்கியதும் தான் தெரியும்.