நாளை 4-வது டெஸ்ட் போட்டி., இந்திய அணியில் மாற்றம் இருக்குமா..?

The 4th Test starts tomorrow. It has been reported that there will be some changes in the Indian team in this match.

நாளை 4-வது டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை 3 போட்டிகள் நடைபெற்ற நிலையில், முதல் போட்டி டிராவில் முடிந்ததால் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமமாக உள்ளனர்.

இந்நிலையில், நாளை 4-வது டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. கடைசி போட்டியில் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன் இருவரும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தவே இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் படுத்தோல்வியை சந்தித்தது. இதனால், ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், நாளைய போட்டியில் யார்யார் இடம்பெறுவர்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்கவாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. காத்திருப்பு பட்டியலில் இருந்த பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.