கொரோனா பரவல்: மகளிருக்கான ஐபிஎல் 2021 போட்டிகள் ஒத்திவைப்பு?

Women's T20 Challenge is likely to be postponed amid the rising cases of corona and the travel restrictions.

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரிக்கும் காரணமாகவும், வெளிநாட்டில் இருந்து வரும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள காரணமாக பெண்கள் டி-20 சேலஞ்ச் ஒத்திவைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியானது.

ஐபிஎல் தொடரில் ஆண்கள் மட்டுமின்றி, பெண்களும் விளையாடுவார்கள். பெண்கள் டி-20 சேலஞ்ச் அதாவது, பெண்களுக்கான ஐபிஎல் தொடரில் வேலாசிட்டி, டிரெயில்ப்ளேஸர்ஸ் மற்றும் சூப்பர்நோவாஸ் அணிகள் உள்ளது. தற்பொழுது இதில் நாங்கள் அணியும் இளையவுள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், இந்தாண்டிற்கான பெண்கள் டி-20 சேலஞ்ச் ஒத்திவைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள், நியூசிலாந்து, மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுடன் விமான சேவைகளை நிறுத்தியுள்ளது. இதன்காரணமாக அந்நாட்டு வீராங்கனைகள் இந்த தொடரில் பங்கேற்க வாய்ப்புகள் கம்மி என்று பிசிசிஐ தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியானது. இதன்காரணமாக இந்தாண்டிற்கான இந்தாண்டிற்கான பெண்கள் டி-20 சேலஞ்ச் ஒத்திவைக்கப்படவுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.