5 -ஆம் ஆட்ட முடிவில் இந்திய அணி 30 ஓவர் முடிவில் 2 விக்கெட்டை இழந்து 64 ரன்கள் எடுத்து 32 ரன்கள் முன்னிலையில் உள்ளனர்.
இங்கிலாந்தில் இந்தியாவிற்கும் நியூசிலாந்திற்கும் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது. முதல் மற்றும் 4-ஆம் நாள் ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, 2-ஆம் போட்டி தொடங்கியது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 217 ரன்கள் எடுத்தனர். இன்று 5-வது நாள் ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 4 மணிக்கு தொடங்கியது.
இந்நிலையில், இன்றை 5-ஆம் நாள் போட்டி தொடங்கும்போது நியூசிலாந்து 2 விக்கெட்டை இழந்து 101 ரன்கள் எடுத்த நிலையில், நியூசிலாந்து தனது முதல் இன்னிங்சிஸை மீண்டும் தொடங்கியது. இந்திய அணியின் பந்து வீச்சில் நியூசிலாந்து சற்று தடுமாற்றத்துடன் விளையாடியது. இறுதியாக 99.2 ஓவரில் நியூசிலாந்து அணி 249 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
இந்திய அணியில் ஷமி 4 விக்கெட்டும், இஷாந்த் சர்மா 3 விக்கெட்டும், அஸ்வின் 2 விக்கெட்டும் பறித்தனர். இதனால், நியூஸிலாந்து அணி 32 ரன்கள் முன்னிலையில் உள்ள நிலையில், இந்திய அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது.
இந்திய அணியில் தொடக்க வீரர்களாக சுப்மான் கில், ரோஹித் இருவரும் களமிறங்கினர். சிறப்பாக விளையாடி வந்த ரோஹித் 81 பந்தில் 30 ரன்கள் எடுத்தார். அதில் 2 பவுண்டரி அடங்கும். நிதானமாக விளையாடி வந்த சுப்மான் கில் 8 ரன்னில் விக்கெட்டை இழந்தார். இவர்கள் இருவரும் டிம் சவுதிடம் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
இந்நிலையில், 5 -ஆம் ஆட்ட முடிவில் இந்திய அணி 30 ஓவர் முடிவில் 2 விக்கெட்டை இழந்து 64 ரன்கள் எடுத்து 32 ரன்கள் முன்னிலையில் உள்ளனர். தற்போது களத்தில் புஜாரா 12 மற்றும் கோலி 8 ரன்களுடன் இருவரும் உள்ளனர்.
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…