மகளிர் பிரிமியர் லீக் 2023 க்கான ஏலம் இன்று மும்பையில் பிற்பகல் 2:30 மணிக்கு தொடங்குகிறது.
unknown nodeமகளிர் பிரிமியர் லீக் 2023ஏலம் :மகளிருக்கான ஐபிஎல் தொடரை பிசிசிஐ முதன்முறையாக இந்த ஆண்டு நடத்த திட்டமிட்டுள்ளது. 5 அணிகள் பங்கேற்கும் மகளிர் பிரீமியர் லீக் 2023க்கான அணி வீராங்கனைகளின் ஏலம் இன்று மும்பையில் நடைபெறுகிறது என பிசிசிஐ அறிவித்துள்ளது.
5 அணிகள்:மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மகளிர் அணி, டெல்லி கேபிடல்ஸ் மகளிர் அணி, குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் UP வாரியர்ஸ்என 5 அணிகளுக்காக, மொத்தம் 409 வீராங்கனைகளில் 246 இந்தியர்கள் மற்றும் 163 வெளிநாட்டு வீராங்கனைகள் ஏலம் விடப்படுகின்றனர்.
மகளிர் ஐபிஎல் 2023:ஆடவர் ஐபிஎல் தொடரானது 2008ஆம் ஆண்டு தொடங்கி வெற்றிகரமாக ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் நடைபெற்று வருகிறது, அதேபோல் பிசிசிஐ தற்போது மகளிருக்காகவும் இந்த மகளிர் ஐபிஎல் தொடரை அறிமுகப்படுத்தியுள்ளது.
மார்ச் 4 முதல் தொடங்கி மார்ச் 26 வரை நடைபெறும் இந்த மகளிர் பிரீமியர் லீக் 2023 தொடரில் மொத்தம் 22 போட்டிகள் திட்டமிடப்பட்டுள்ளன. போட்டிகள் நவி மும்பையில் உள்ள DY பட்டீல் ஸ்டேடியத்திலும், மும்பையில் உள்ள பிரபோர்ன் ஸ்டேடியத்திலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து அணிகளுக்கும் மொத்தம் 90 வீராங்கனைகளை ஏலத்தில் எடுக்கமுடியும், ஒரு அணி குறைந்தபட்சம் 15 வீரர்களையும் அதிகபட்சம் 18 வீரர்களையும் வாங்கலாம், அதில் 6 வெளிநாட்டு வீராங்கனைகளை ஒரு அணி ஏலத்தில் எடுக்கமுடியும்.
unknown nodeஇந்திய வீராங்கனைகள்:ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, தீப்தி சர்மா, ரேணுகா சிங், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷெபாலி வர்மா, பூஜா வஸ்த்ரகர், ரிச்சா கோஷ், சினே ராணா மற்றும் மேக்னா சிங்.
ஆஸ்திரேலிய வீராங்கனைகள்:ஆஷ்லே கார்ட்னர், எல்லிஸ் பெர்ரி, மெக் லானிங், அலிசா ஹீலி, ஜெஸ் ஜோனாசென் மற்றும் டார்சி பிரவுன்.
இங்கிலாந்து வீராங்கனைகள்:சோஃபி எக்லெஸ்டோன், நாட் ஸ்கிவர், டேனியல் யாட்ச் மற்றும் கேத்தரின் ஸ்கிவர்.
சோஃபி டெவின் (நியூசிலாந்து), சினாலோ ஜாஃப்டா (தென் ஆப்பிரிக்கா), டியான்ட்ரா டாட்டின் (மேற்கிந்திய தீவுகள்) மற்றும் லாரின் ஃபிரி (ஜிம்பாப்வே) ஆகிய வீராங்கனைகள் இந்த ஏலத்தில் கவனிக்கப்பட வேண்டிய பட்டியலில் இருக்கின்றனர். ஏலம் பிற்பகல் 2:30 மணிக்கு மும்பையின் பந்த்ரா-குர்லா வளாகத்தில் உள்ள ஜியோ மையத்தில் நடைபெறுகிறது.
unknown node