யஷஸ்வி ஜெய்ஸ்வால் அறிமுக டெஸ்டில் சதம் அடித்து சாதனை

யஷஸ்வி ஜெய்ஸ்வால் அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து மகத்தான பல சாதனைகளை படைத்துள்ளார்.

Featured image

யஷஸ்வி ஜெய்ஸ்வால் அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து மகத்தான பல சாதனைகளை படைத்துள்ளார்.

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவு கிடையான முதல் டெஸ்ட் போட்டி விண்ட்சர் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.டாஸ் வென்ற மேற்கிந்திய தீவு பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது இதனைத் தொடர்ந்து களமிறங்கிய மேற்கிந்திய தீவு அணி இந்திய அணி வீரர்களின் பந்துவீச்சில் 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட் களையும் இழந்தது.

இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது  அற்புதமான சூழலால் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து  இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா களமிறங்கினர்.

யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது முதல் அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் அடித்துள்ளார்.இவர் இதன் மூலம் அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த 17வது இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்துள்ளார்.