நியூசிலாந்து அணிக்கு அபாரதமா.? அதுவும் சம்பளத்தில் இருந்து 60 சதவீதம்.!
- நேற்று( சனிக்கிழமை) நடைபெற்ற இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி பேட்டிங்கின் போது, நியூசிலாந்து அணி மூன்று ஓவர்கள் தாமதமாக பந்துவீசியதாக 60 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி முதலில் 5 டி20 போட்டிகள் விளையாடியது. அதில் இந்திய அணி அபாரமாக விளையாடி 5:0 என்ற கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து நியூசிலாந்துடன் 3 ஒரு நாள் போட்டிகள் விளையாடி வரும் இந்திய அணி முதல் போட்டியில் தோல்வியை சந்தித்தது. பின்னர் நேற்று ஆக்லாந்தில் ஈடன்பார்க் மைதானத்தில் நடைபெற்ற 3-வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நியூஸ்லாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டை விட்டனர்.
பின்னர் நிதானமாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் 52 ரன்கள் எடுத்து அவுட்டானார். இவரை தொடர்ந்து சிரமாக ஆடிய ஜடேஜா ஆட்டத்தை இருவரை எடுத்து சென்றார் ஒரு கட்டத்தில் இந்திய வெற்றி பெரும் என்று நினைக்கும் போது ஜடேஜா அவுட்டாகி, 251 ரன்களுக்கு இந்திய அணி ஆல்-அவுட்டானது. இதனால் நியூசிலாந்து அணி தொடரை கைப்பற்றியது. இந்த போட்டியில் இந்திய அணி பேட்டிங்கின் போது, நியூசிலாந்து அணி மூன்று ஓவர்கள் தாமதமாக பந்துவீசியதாக போட்டி நடுவர் அறிவித்தார். இதனால் ஐசிசி விதிகளின் படி ஒவ்வொரு ஓவருக்கும் 20 சதவீதம் என நியூசிலாந்து அணிக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 60 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.