ஃபிஃபா உலகக் கோப்பை வெற்றி; தங்க ஐபோன் பரிசளித்த மெஸ்ஸி.!

ஃபிஃபா உலகக்கோப்பை வெற்றியைக் கொண்டாடும் விதமாக லியோனல் மெஸ்ஸி, அணி வீரர்களுக்கு தங்க ஐபோன்களைப் பரிசளித்துள்ளார்.

ஃபிஃபா உலகக்கோப்பை வெற்றியைக் கொண்டாடும் விதமாக லியோனல் மெஸ்ஸி, அணி வீரர்களுக்கு தங்க ஐபோன்களைப் பரிசளித்துள்ளார்.

ஃபிஃபா உலகக்கோப்பை 2022 தொடரில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் அணியின் கேப்டன் மெஸ்ஸி, தனது அணிவீரர்கள் 35 பேருக்கு தங்க முலாம் பூசப்பட்ட ஐபோன் 14- ப்ரோ பரிசளித்துள்ளார். அர்ஜென்டினா அணியின் இந்த மறக்க முடியாத வெற்றியை மெஸ்ஸி தனது அணி வீரர்களுக்கு ஐபோன்கள் பரிசளித்து கொண்டாடியுள்ளார்.

சமீபத்தில் மெஸ்ஸிக்கு 2022 ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரர் விருதை, ஃபிஃபா வழங்கியது. கால்பந்து உலகில் நட்சத்திர வீரராக இருக்கும் மெஸ்ஸி எப்போதும் தனது அன்பை வெளிக்காட்டுவதில் குறைவில்லாமல் நடந்து கொள்வார் அதேபோல், கத்தாரில் நடந்த உலகக்கோப்பை தொடரில் அர்ஜென்டினா அணிக்கு கிடைத்த இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றி, மெஸ்ஸிக்கும் நாட்டிற்கும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இந்த வெற்றியை நினைவுகூரும் வகையில் மெஸ்ஸி, தன் அணி வீரர்களின் பெயர் மற்றும் ஜெர்சி நம்பர் அடங்கிய தங்க ஐபோன்களை பரிசளித்துள்ளார். இதன் மதிப்பு சுமார் 2,00,000 டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.