உலகக்கோப்பை வெற்றிக்கு பிறகு இன்ஸ்டாகிராம் தன்னை பிளாக் செய்ததாக லியோனல் மெஸ்ஸி கூறியுள்ளார்.
unknown nodeகத்தாரில் நடந்த ஃபிஃபா 2022 கால்பந்து உலகக் கோப்பை தொடரில், இறுதி போட்டியில் பிரான்ஸை வீழ்த்தி அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டம் வென்றது. மேலும் உலகக்கோப்பை தொடரின் சிறந்த வீரருக்கான கோல்டன் பால் விருது, லியோனல் மெஸ்ஸிக்கு வழங்கப்பட்டது.
இந்த உலகக்கோப்பை தொடருக்கு பின் ரசிகர்கள் பலரும் அர்ஜென்டினா மற்றும் மெஸ்ஸிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வந்த நிலையில், மெஸ்ஸியின் இன்ஸ்டா கணக்கில், உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்து செய்திகளை பகிர்ந்து வந்தனர்.
இந்த நிலையில் மெஸ்ஸி, உலகக்கோப்பை வெற்றிக்கு பிறகு தனது இன்ஸ்டாகிராம் கணக்கு சில நாட்களுக்கு முடக்கப்பட்டது என்று கூறியுள்ளார். தனக்கு இன்ஸ்டாவில் ரசிகர்கள் அனுப்பிய மில்லியன் கணக்கான செய்திகளால், அவர்கள் தனது கணக்கை சில நாட்களுக்கு முடக்கி வைத்ததாக மெஸ்ஸி தெரிவித்தார்.
மெஸ்ஸியின் இன்ஸ்டா கணக்கு அவரால் மட்டுமே இயக்கப்படுகிறது, மேலும் அதில் அவர் பதிவிடும் பதிவுகள் முழுதும் மெஸ்ஸியால் மட்டுமே நிர்வகிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
unknown node