3 ஆண்டுகளுக்கு பின் காலிறுதி போட்டிக்குள் நுழைந்த ரியல் மாட்ரிட்.. 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி!

Real Madrid beat Atlanta in the rate 3-1 Win and advance to the quarter-finals of the Champions League.

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் தற்பொழுது நடைபெற்று வரும் நிலையில், இதில் அட்லாண்டா அணியை வீழ்த்திய ரியல் மாட்ரிட் அணி, கால் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து சுற்றுக்கான காலிறுதி போட்டி, ஸ்பெயினில் உள்ள Estadio Alfredo Di Stefano மைதானத்தில் நடைபெற்றது. இதில் அட்லாண்டா – ரியல் மாட்ரிட் அணிகள் மோதியது. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி, கால் இறுதி போட்டிக்குள் நுழையும் வாய்ப்பை பெரும்.

அந்தவகையில் இரு அணிகளும் அதிரடியாக ஆடியது. ஆட்டத்தின் முதல் கோலை 34 ஆம் நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணியின் வீரர் கரிம் பென்சிமா அடிக்க, அதனைதொடர்ந்து 60 ஆம் நிமிடத்தில் பெனால்டி மூலமாக 2 ஆம் கோலை ராமோஸ் அதிரடியாக அடித்தார்.

அதனைதொடர்ந்து 83 ஆம் நிமிடத்தில் அட்லாண்டா அணியின் வீரர் கோல் அடிக்க, 84 ஆம் நிமிடத்தில் அசெசினோ ஒரு கோல் அடித்து அணியை வெற்றிபெற செய்தார். இதனால் 3 ஆண்டுகளுக்கு பின் ரியல் மாட்ரிட் அணி, காலிறுதி போட்டிக்குள் நுழைந்தது. 2014 முதல் 18 வரையிலான 5 சீசனில் 4 முறை சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது, குறிப்பிடத்தக்கது.