ரெட் கார்டுகள், மோதல்கள், நெகிழ்ச்சியான தருணங்கள்: ஸ்பெயின் - அர்ஜென்டினா இறுதிப்போட்டியின் ஹைலைட்ஸ்!

ஸ்பெயின் வீரர் பாவ் குபர்சி மீது தாக்குதல் நடத்தியதற்காக அர்ஜென்டினாவின் என்சோ பெர்னாண்டஸ் ரெட் கார்டு பெற்று வெளியேற்றப்பட்டார்.

Hero Image

நியூ ஜெர்சி : 2026 FIFA உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி, ஸ்பெயினின் வரலாற்று வெற்றியில் முடிந்தது. அர்ஜென்டினாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் சாம்பியன் பட்டம் வென்றது. ஆனால், ஆட்டத்தின் முடிவில் மைதானத்தில் நடந்த மோதல்களும், அர்ஜென்டினா வீரர்கள் காட்டிய ஆக்ரோஷமும் கால்பந்து ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பரபரப்பான இறுதி நிமிடம்:

கூடுதல் நேரத்தில் (Extra time) 106-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் ஃபெர்ரான் டோரஸ் (Ferran Torres) அடித்த அந்த ஒரு கோல், அர்ஜென்டினா மற்றும் லியோனல் மெஸ்ஸியின் உலகக்கோப்பை கனவைச் சிதைத்தது. ஸ்பெயினின் ஆதிக்கத்திற்கு முன்னால், அர்ஜென்டினா அணியால் 120 நிமிடங்களில் ஒரு ஷாட் கூட டார்கெட்டை நோக்கி அடிக்க முடியவில்லை.

மைதானத்தில் வெடித்த மோதல்

ஆட்டத்தின் இறுதிச் சொற்ப நிமிடங்களில் அர்ஜென்டினா வீரர்கள் மிகவும் ஆக்ரோஷமாகச் செயல்பட்டனர்.

என்சோ பெர்னாண்டஸ் (Enzo Fernandez): ஸ்பெயின் வீரர் பாவ் குபர்சி மீது கொடூரமான தாக்குதலை நடத்தியதற்காக அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

லியோனல் மெஸ்ஸி: ஆட்டம் முடிந்த பிறகு, மைதானத்தில் அமர்ந்திருந்த மெஸ்ஸியை ஸ்பெயின் வீரர் லமின் யமால் அணுகி கைகுலுக்கி கட்டித்தழுவினார். இது ஒரு நெகிழ்ச்சியான தருணமாக அமைந்தது.

ரெட் கார்டு: மோதல்களுக்கு இடையே, அர்ஜென்டினாவின் லியாண்ட்ரோ பரேடெஸ் (Leandro Paredes), ஸ்பெயின் வீரர்களான எரிக் கார்சியா மற்றும் காவி ஆகியோரைத் தள்ளியதால் அவருக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது. ஆனால், பலரது கவனத்திற்கு வராமல் இந்தச் சம்பவம் மறைந்து போனது.

பயிற்சியாளர் மற்றும் வீரர்கள்: அர்ஜென்டினா பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி கடும் கோபத்தில் யாரையோ பார்த்து கத்திக்கொண்டிருக்க, அவரை ஸ்பெயின் வீரர்கள் தடுத்து நிறுத்தினர். அதேபோல், நிக்கோலஸ் ஓட்டமெண்டி (Nicolas Otamendi) ஸ்பெயின் வீரர் ரோட்ரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

லமின் யமால் : இறுதிப்போட்டியில் ஸ்பெயினிடம் தோல்வியடைந்ததால் அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி மிகுந்த ஏமாற்றத்தில் காணப்பட்டார். போட்டி முடிந்ததும் மனவேதனையுடன் இருந்த மெஸ்ஸியிடம் ஸ்பெயின் இளம் நட்சத்திரம் லமின் யமால் நேரில் சென்று அவரை கட்டிப்பிடித்து ஆறுதல் கூறினார்.

வெற்றிக்குப் பின் என்ன சொன்னார் டோரஸ்?

வெற்றிக்கான கோலை அடித்த ஃபெர்ரான் டோரஸ் கூறுகையில், "இந்த வெற்றி வெறும் 26 வீரர்களுக்கு மட்டும் உரியதல்ல, இது 47 மில்லியன் ஸ்பெயின் மக்களுக்கும் உரியது. மெஸ்ஸி போன்ற ஒரு ஜாம்பவானுக்கு எதிராக விளையாடும்போது பதற்றம் இருப்பது இயல்பு, ஆனால் எங்கள் மீது நாங்கள் வைத்திருந்த நம்பிக்கைதான் எங்களை வெற்றி பெற வைத்தது," என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.