Hockey World Cup 2023: ஹர்திக் சிங்கிற்கு எம்ஆர்ஐ ஸ்கேன் வேல்ஸுக்கு எதிராக விளையாடுவது சந்தேகம்

இந்திய அணியின் அட்டாக்கிங் மிட்ஃபீல்டர் ஹர்திக் சிங், ஹாக்கி உலகக் கோப்பையின் வேல்ஸுக்கு எதிரான போட்டியில், தொடை காயம் காரணமாக இடம்பெற வாய்ப்பில்லை என்ற தகவல்

இந்திய அணியின் அட்டாக்கிங் மிட்ஃபீல்டர் ஹர்திக் சிங், ஹாக்கி உலகக் கோப்பையின் வேல்ஸுக்கு எதிரான போட்டியில், தொடை காயம் காரணமாக இடம்பெற வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

24 வயதான அவர், ஸ்பெயினுக்கு எதிரான இந்தியாவின் 2-0 வெற்றியில் ஒரு கோலை அடித்தார் மற்றும் ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்துக்கு எதிராக 0-0 என டிராவில் வாய்ப்புகளை உருவாக்கி முக்கிய பங்கு வகித்தார்.

“எம்ஆர்ஐ முடிவுகளின் அடிப்படையில், அணி நிர்வாகம் அவரது தொடை காயத்தின் அளவை மதிப்பீடு செய்து, இந்தியா Vs வேல்ஸ் போட்டிக்கு அவர் விளையாடுவாரா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.