உலக கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்தியாவில் 2-வது முறையாக ஒடிசாவில் உலகக்கோப்பை ஹாக்கி தொடர் நேற்று தொடங்கிய நிலையில், வரும் 29ஆம் தேதி வரை இந்த தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் கலந்து கொள்ள உள்ளது.
ஒவ்வொரு அணிக்கும் நான்கு அணிகள் வீதம் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பை தொடரின் முதல் நாளான நேற்று இந்திய அணி தனது டி பிரிவில் ஸ்பெயின் அணியுடன் மோதியது.
இந்த போட்டியில் 12வது நிமிடத்தில் ரோகித்தாஸ் அமித் இந்திய அணிக்காக முதல் கோலை அடித்தார். இதனை தொடர்ந்து ஸ்பெயின் அணி எடுத்த அனைத்து நிகழ்ச்சியிலும் தோல்வியடைந்தது.
ஆட்டத்தின் 26 ஆவது நிமிடத்தில் இந்தியாவின் ஹார்டிங் சிங் இந்திய அணிக்காக இரண்டாவது கோலை அடித்தார். இதன்பிறகு இரு அணிகளும் கோல் எதும் அடிக்காத காரணத்தினால் இறுதியில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்தியாவில் இரண்டாவது முறையாக நடைபெறும் உலக கோப்பை காக்கி தொடரில் முதல் நாளே இந்திய அணி தனது வெற்றியை பதிவு செய்தது. இந்திய ஹாக்கி அணி உலக கோப்பையை வென்று 48 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இந்த முறை உலக கோப்பை வெல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.