INDvBAN : போட்டியை பார்க்க ரெடியா? ரூ.200 முதல் தொடங்கும் டிக்கெட் விற்பனை!
இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு இடையே நடக்கவுள்ள டெஸ்ட் தொடருக்கான டிக்கெட் விற்பனை தேதி குறித்த விவரங்கள் வெளியாகிள்ளது.
சென்னை : கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆக 19-ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டி சென்னை சேப்பாக் மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில், போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை எப்போது தொடங்கும் என ரசிகர்கள் காத்திருந்தார்கள்.
இதனையடுத்து, போட்டிக்கான டிக்கெட் விற்பனை பற்றிய விவரம் வெளியாகி இருக்கிறது. அதன்படி, டெஸ்ட் போட்டியின் ஒவ்வொரு நாளுக்கான டிக்கெட்டுகளை மைதானத்தின் கவுண்டர்களில் இருந்து, போட்டி நாட்களில் காலை 7:00 மணிக்கு வாங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ளதால் அதனுடைய,கவுண்டர்களில் முதல் போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்கிக்கொள்ளலாம். இரண்டாவது போட்டி கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது. எனவே, இரண்டாவது போட்டியை பார்க்க விருப்புபவர்கள் அதனுடைய,கவுண்டர்களில் புக் செய்து கொள்ளலாம்.
READ MORE- INDvsBAN : எதிர்பார்க்கும் பிளேயிங் லெவன்! போட்டியை எங்கு காணலாம்!
இந்த முதல் டெஸ்ட் போட்டிக்கான முதல் நாள் டிக்கெட் விலை ரூ. 200 முதல் தொடங்குகிறது. எனவே, டெஸ்ட் போட்டியியை நேரடியாக பார்க்க விரும்புபவர்கள் இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாளுக்கு ரூ.200 ரூபாய்க்கு பார்க்கலாம்.
டிக்கெட் கவுண்டர்களை தாண்டி போட்டிக்கான டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலமாகவும் பெற்று கொள்ளலாம். அதன்படி, Paytm-இன் Insider.in இணையத்தில் பெற்று கொள்ளலாம். மேலும், இருக்கைகளுக்கு ஏற்றவாறு டிக்கெட்டின் கட்டணத்தொகையும் அதிகரிக்கிறது, அந்த டிக்கெட் & இருக்கையின் விவரங்களை கீழே பார்க்கலாம்.
டிக்கெட் விலை விவரம்
- FGH அப்பர் ஸ்டாண்ட் – ரூ. 200
- C, D & E கீழ் அடுக்கு – ரூ. 1,000
- I, J & K கீழ் அடுக்கு – ரூ. 2,000
- I, J & K மேல் அடுக்கு – ரூ. 1,250
- KMK மொட்டை மாடி – ரூ. 5,000
- C , D & E (A/c) பெட்டி – ரூ. 10,000