கைலியன் எம்பாப்பே : 2023- 2024 ம் ஆண்டிற்கான ஐரோப்பிய தொடரை ரியல் மாட்ரிட் அணி கைப்பற்றி இருந்த நிலையில், 2024- 2025ம் ஆண்டிற்கான ஐரோப்பிய கால்பந்து தொடரில் ரியல் மாட்ரிட் அணிக்காக எம்பாபே விளையாடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
2023- 2024 ம் ஆண்டிற்கான ஐரோப்பிய தொடரில் மற்றொரு கிளப்பான பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (PSG) கிளப்பிற்காக விளையாடிய எம்பாபே அடுத்த வருடத்தில் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாட இருப்பதாக கிட்ட தட்ட உறுதியாகி உள்ளது.
இதனால், ரியல் மாட்ரிட் கிளப்பின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தாலும் மறுபுறம் பிரான்ஸ் நாட்டு ரசிகர்கள் சற்று ஏமாற்றத்தில் தான் இருக்கின்றனர். இந்த அதிகாரப்பூர்வ தகவலை ரியல் மாட்ரிட் அணி வருகிற வாரத்தில் அறிவிக்க உள்ளதாகவும் தெரிகிறது.
மேலும், வெளியான தகவலின் படி எம்பாபே வருகிற 2029ம் ஆண்டு வரை ரியல் மாட்ரிட் கிளப்பிற்காக விளையாட இருப்பதாக ஒப்பந்தம் செய்யவுள்ள நிலையில் ஒரு தொடருக்கு 15 மில்லியன் யூரோக்கள் அவருக்கு வழங்கப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதனால், இந்த இடமாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை ரியல் மாட்ரிட் வருகிற வார நாட்களில் வெளியிடலாம் என கால்பந்து ரசிகர்களால் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…
கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…