காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரண்டு யூனியன் பிரதேசங்களாக அம்மாநிலம் பிரிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பும் ஆதரவும் வந்தவண்ணம் இருக்கிறது. சர்வதேச அளவிலும் இதே நிலைதான்.
காஷ்மீர் மாநிலத்தின் முக்கிய அரசியல் பிரமுகர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியானது. இதில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இதனை உள்துறை அமைச்சர் அமித்ஷா மறுப்பு தெரிவித்து, பரூக் ஆபத்துல்லாவை கைது செய்யவுமில்லை, அவர் வீட்டுக் காவலிலும் இல்லை, அவர் சுதந்திரமாகவே உள்ளார் என கூறினார்.
இந்நிலையில் மாநிலங்களவை உறுப்பினரும் மதிமுக கட்சி தலைவருமான வைகோ அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் தங்கள் கட்சி சார்பி; 15ஆம் தேதி மாநாடு நடக்க உள்ளது. அந்த மாநாட்டிற்கு முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களை அழைத்து வருகின்றோம். அந்த மாநாட்டிற்காக காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை சந்தித்து அழைப்பிதழ் கொடுக்க தீர்மானித்தோம். ஆனால் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. அவர் எங்கு இருக்கிறார் என்றும் தெரியவில்லை. அவரை கண்டறிந்து தருமாறு ஆட்கொணர்வு மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் வைகோ தாக்கல் செய்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருப்பது, மாநிலங்களவை உறுப்பினர் என்பதால் கண்டிப்பாக வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். மேலும், காஷ்மீரில் அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டுக் காவலில் வைத்து இருப்பது தொடர்பான சர்ச்சைகளுக்கு இதன் மூலம் பதில் கிடைக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சண்டிகர் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபயர் போட்டி இன்று மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சண்டிகர் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபயர் போட்டி இன்று மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
கர்நாடகா : கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 1-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக…
நோர்வேயில் : நார்வே செஸ் போட்டியில் இந்தியாவின் உலக சாம்பியன் டி. குகேஷ் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்து…
மக்கா : விமானத்தைத் தவறவிட்ட நபரை மீண்டும் விமானமே அழைத்து சென்ற அதிசிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. லிபியாவைச் சேர்ந்த அமீர்…
சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் ஏற்கனவே பேசுபொருளாக இருந்த நிலையில், அதனை இன்னும் பெரிய அளவில்…