பிறந்தநாள் விழாவில் சாப்பிட்டவர் உயிரிழந்த சோகம்.., 27 பேர் மருத்துவமனையில் அனுமதி!
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விருந்து உண்ட சுமார் 27 பேருக்கு வாந்தி, மயக்கம், மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதில், மருத்துவமனைக்கு செல்லாத 60 வயதான கருப்பையா என்பவர் உயிரிழந்தார், இது தொடர்பாக, RTO, வட்டாட்சியர் உள்ளிட்டோர் விசாரணையை தொடங்கியுள்ளனர். ஆரம்பகட்ட விசாரணையில், விருந்தில் வழங்கப்பட்ட உணவு […]