அமெரிக்காவின் 46 வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்றார். அவருக்கு அந்நாட்டின் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அமெரிக்கா அதிபர் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், 46 வது அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த தேர்தலில் போட்டியிட்ட டிரம்ப், தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் பிடிவாதமாக இருந்து வந்த நிலையில், வெள்ளை மாளிகையில் இருந்து இன்று வெளியேறினார். இதனைதொடர்ந்து, கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளின்படி ஜோ பைடன் பதவியேற்கும் நிகழ்ச்சி தொடங்கியது. […]