அசாமின் சில்சாரில், ஜெயா தாஸ் மற்றும் படல் தாஸ் தம்பதியினருக்கு 5.2 கிலோகிராம் எடையுடன் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அசாமின் சில்சாரில், ஜெயா தாஸ் மற்றும் படல் தாஸ் தம்பதியினருக்கு 5.2 கிலோகிராம் எடையுடன் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இவர்களுக்கு பிறந்த முதல் குழந்தை சுமார் 3.8 கிராம் 8 கிலோகிராம் எடை இருந்ததாக கூறுகின்றனர். அசாம் மாநிலத்தில் அதிக எடையுடன் பிறந்த முதல் குழந்தை இது தான் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அப்பெண்ணுக்கு அறுவை சிகிச்சை […]
இன்று இந்திய வடகிழக்கு மாநிலங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அங்கு வசிக்கும் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இன்று அதிகாலை 1.06 மணிக்கு மணிப்பூர் மொய்ராங் பகுதியில் 3.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அசாமின் தேஜ்பூர் பகுதியில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது அதிகாலை 2.04 மணிக்கு நிகழ்ந்துள்ளது. பின்னர் அதிகாலை 4.20 மணியளவில் மேகாலயாவின் மேற்கு காஜி பகுதியில் 2.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு […]
அசாமில் கொரோனா நோயாளி ஒருவர் உயிரிழந்ததால் அவரது உறவினர்கள் ஆத்திரம் அடைந்து அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் மற்றும் மருத்துவமனை ஊழியர்களை தாக்கிய காட்சி வெளியாகி உள்ள நிலையில் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்த நெருக்கடியான காலகட்டத்திலும் தங்கள் உயிரைப் பொருட்படுத்தாமல் முன்கள பணியாளர்களாக பணியாற்றக்கூடிய மருத்துவர்கள் பல இடங்களில் அவமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், அசாமில் உள்ள ஹோஜோய் […]
அசாமில் கொரோனா சோதனையைத் தவிர்ப்பதற்காக ஜாகிரோட் ரயில் நிலையத்திலிருந்து பயணிகள் தப்பி ஓட்டம். இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டி வரும் நிலையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. ஆனால் இதனை பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லாத மக்கள் பலர் இன்னும் பயந்து எந்த வித பரிசோதனையோ அல்லது தடுப்பூசியை போட்டுக் கொள்வதற்கோ முன் வர மறுக்கின்றனர். இதனையடுத்து திங்கள்கிழமை (மே 24) அசாம் மாநிலத்தில் குவஹாத்தி நகரில் கொரோனா சோதனையிலிருந்து தப்பிக்க […]
அசாம் மாநிலத்தில் உள்ள பாதுகாப்பு படையினருக்கும் தேசிய விடுதலைப் படையை சேர்ந்த தீவிரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 8 தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளனர். அசாம் மாநிலத்தில் உள்ள மேற்கு கர்பி அங்லாங் மாவட்டம், நாகலாந்து எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் டி எம் எல் ஏ தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக அம்மாநிலத்தின் பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து அந்த பகுதிக்கு தேடுதல் வேட்டைக்காக காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் பிரகாஷ் சோனாவால் தலைமையில் காவல்துறை அதிகாரிகள், அசாம் […]
அசாம் புதிய கோவிட்-19 வழிகாட்டுதல்கள் வெளியீடு கடைகள் பதியம் 1 மணி வரை திறந்திருக்க உத்தரவு. இந்தியாவில் கொரோனாவின் 2 வது பேரழிவை ஏற்படுத்தி வருகிறது, இதன்விளைவாக நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கில் மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பரிதாபகரமாக உயிரிழந்து வருகின்றனர். இதனால் பல்வேறு மாநிலங்களில் முழுஊரடங்கு மாநில அரசுகள் அமல்படுத்தி வருகின்றனர், அந்த வரிசையில் அசாம் மாநிலத்தில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அம்மாநில அரசு ஊரடங்கை விதித்ததுடன் புதிய கொரோனா நடைமுறைகளையும் வெளியிட்டுள்ளது. […]
அசாம் மாநிலத்தின் முதல்வராக ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று பதவியேற்றுள்ளார்.சர்மாவுக்கு ஆளுநர் ஜெகதீஷ் முகி உறுதிமொழி வழங்கினார். அசாம் மாநில சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 126 தொகுதிகளில் 75 இடங்களில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது.இதனையடுத்து ஹிமந்தா பிஸ்வா சர்மா மற்றும் சர்பானந்த சோனாவால் ஆகிய இருவரும் முதல்வர் பதவிக்கு தகுதியானவர்களாக இருந்தனர்.அதனால்,இந்த இரண்டு பேரில் யாரை முதல்வராக தேர்ந்தெடுப்பது என்பது குறித்து டெல்லியில் பாஜகவின் முக்கிய தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். அதன்பின்னர்,நேற்று குவாஹாத்தியில் நடைபெற்ற பாரதிய ஜனதா […]
அசாம் மாநிலத்தின் தற்போதைய முதல்வர் சர்பானந்தா சோனோவால் தனது ராஜினாமா கடிதத்தை அசாம் ஆளுநர் ஜெகதீஷ் முகியிடம் கொடுத்துள்ளார் சமீபத்தில் தமிழ்நாடு, அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில், 126 தொகுதிகளை உள்ளடக்கிய அசாம் மாநிலத்தில் தேர்தலில் 75 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது. இதில், 60 தொகுதிகளில் தனித்து வெற்றி பெற்ற பாஜக முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமலே தேர்தலை எதிர்கொண்டது. இதனால், முதல்வர் யார் என்பது […]
அசாம் மாநிலத்தில் உள்ள தேயிலை தோட்டங்களுக்குள் கொரோனா பரவ ஆரம்பித்துள்ள நிலையில் 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாக பரவி வரும் நிலையில் மக்கள் பாதுகாப்புடனும் சமூக இடைவெளியை பின்பற்றியும் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். அசாமிலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 5000 பேர் அங்கு கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், 46 […]
அசாம் சட்ட சபை தேர்தலில் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றியைப் பெற்று ஆளும் பாஜக வரலாற்று சாதனை படைத்துள்ளது. அசாம் சட்டசபை தேர்தல் 126 தொகுதிகளில் 3 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த மார்ச் 27-ஆம் தேதி முதல் கட்டமாக 12 மாவட்டங்களில் உள்ள 47 தொகுதிகளிலும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 1ஆம் தேதி 13 மாவட்டங்களிலுள்ள 39 தொகுதிகளுக்கும், மூன்றாவது கட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி 12 மாவட்டங்களில் உள்ள […]
இன்று காலை அசாமில் 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இது வடகிழக்கு மற்றும் வடக்கு வங்கத்தின் சில பகுதிகளில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுவரை அங்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து எந்த தகவலும் இல்லை என்றாலும், உடைந்த சுவர்கள் மற்றும் ஜன்னல்கள் மற்றும் சுவர்களில் ஏற்பட்ட விரிசல்களின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. Few early pictures of damage in Guwahati. pic.twitter.com/lTIGwBKIPV — Himanta Biswa Sarma (@himantabiswa) April 28, 2021 வடகிழக்கு மற்றும் அண்டை […]
இந்தியா முழுவதும் கொரோனா பரவலுக்கு எதிராக தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நிலையில், அசாம் மாநிலத்தில் 18 முதல் 45 வயதுள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில், நாள் ஒன்றுக்கு 2.50 லட்சத்திற்கு மேலானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவல் அதிகமுள்ள மாநிலங்களில் கட்டுப்பாட்டுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. அதேசமயத்தில் தடுப்பூசிகள் போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் தற்பொழுது 45 […]
பாஜக வேட்பாளர் காரில் வாக்குப்பதிவு இயந்திரம் பிடிப்பட்டது தொடர்பாக 4 அதிகாரிகள் சஸ்பெண்ட். மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களில் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்றது.அசாமில் உள்ள பதர்கண்டி தொகுதியில் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் நேற்று வாக்குப்பதிவு இயந்திரம் பாஜக வேட்பாளர் காரில் கண்டுபிடிக்கப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வாக்குப்பதிவு இயந்திரம் எடுத்து செல்லும் தேர்தல் ஆணையத்தின் கார் […]
பதர்கண்டி தொகுதி தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பெட்டிக்கு எந்த சேதாரமும் இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களில் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், அஸ்ஸாமில் உள்ள பதர்கண்டி சட்டசபையில் நேற்று இரவு ஒரு காரில் வாக்கு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கார் தேர்தல் ஆணையத்திற்கு சேர்ந்தது அல்ல என்று கூறி பொதுமக்கள் அந்த […]
காலை 9 மணி நிலவரப்படி, அசாமில் 8.84%, மேற்கு வங்கத்தில் 7.72% வாக்குகள் பதிவாகியுள்ளது. மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களில் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளிலும், அசாமில் 47 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளிலும் மொத்தமாக 191 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அசாமில் 47 தொகுதிகளில் 264 வேட்பாளர்கள் போட்டியிடுகினறனர். திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட்-காங்கிரஸ் கூட்டணி கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இரு மாநிலங்களிலும், காலை […]
மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களில் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களில் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளிலும், அசாமில் 47 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளிலும் மொத்தமாக 191 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அசாமில் 47 தொகுதிகளில் 264 வேட்பாளர்கள் போட்டியிடுகினறனர். திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட்-காங்கிரஸ் கூட்டணி கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. 10,288 வாக்குச்சாவடிகளில் 73 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் […]
அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் நாளை முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் நாளை முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனையடுத்து, நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரங்கள் முடிவடைந்தது. அசாமில் 3 கட்டங்களாகவும், மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாகவும் தேர்தல் நடைபெற உள்ளது. மேற்கு வங்கத்தில், 8 கட்டங்களாக நடைபெற உள்ள தேர்தலில், முதல் கட்ட தேர்தல், 30 சட்டசபை தொகுதிகளில் நாளை நடை பெறுகிறது. அதேபோல், அசாம் மாநிலத்தில், 126 இடங்களை […]
மத்திய அரசு மற்றும் அசாம் அரசு உள்கட்டமைப்பை உருவாக்க ஒத்துழைப்புடன் செயல்படுகின்றது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இன்று அசாம் மாநிலத்திற்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளார். தெமாஜியில் சிலாபத்தர் என்னுமிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ,பிரதமர் மோடி முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதன் பின் பிரதமர் மோடி பேசுகையில்,மத்திய அரசு மற்றும் அசாம் அரசு உள்கட்டமைப்பை உருவாக்க ஒத்துழைப்புடன் செயல்படுகின்றன. மாநிலத்திற்கு பெரும் ஆற்றல் இருந்தபோதிலும், இதற்கு முன் ஆட்சி செய்த […]
அசாம் மாநிலத்தில் பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இன்று அசாம் மாநிலத்திற்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளார்.அங்கு சென்ற அவர் தெமாஜியில் சிலாபத்தர் என்னுமிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்.இந்த நிகழ்ச்சியில் முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்தியன் ஆயில் பொங்கைகாவ்ன் சுத்திகரிப்பு ஆலையில் இந்த்மாக்ஸ் (INDMAX) யூனிட், மதுபானில் உள்ள ஆயில் இந்தியா நிறுவனத்தின் செகண்டரி டேங்க் ஃபார்ம் மற்றும் டின்சுக்கியாவில் மாகுமிலுள்ள ஹெபடா கிராமத்திலுள்ள கேஸ் […]
இன்று பிரதமர் நரேந்திர மோடி அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். காலை அசாம் மாநிலத்திற்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார்.அங்குள்ள தெமாஜியில் சிலாபத்தர் என்னுமிடத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியொன்றில் பிரதமர் முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.இந்நிகழ்ச்சியின் போது பொறியியல் கல்லூரிகளைத் திறந்து வைக்கிறார். பின் மாலை மேற்கு வங்க மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். அம்மாநிலத்தில் உள்ள ஹூக்ளியில் பல்வேறு ரயில்வே திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.மேலும் அசிம்கனி முதல் கர்கிராகாட் சாலை பிரிவு […]