அசாம் பாதுகாப்பு படையினருடன் தீவிரவாதிகள் மோதல் – 8 தீவிரவாதிகள் உயிரிழப்பு!

Eight militants have been killed in a clash between security forces and National Liberation Army militants in Assam.

அசாம் மாநிலத்தில் உள்ள பாதுகாப்பு படையினருக்கும் தேசிய விடுதலைப் படையை சேர்ந்த தீவிரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 8 தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.

அசாம் மாநிலத்தில் உள்ள மேற்கு கர்பி அங்லாங் மாவட்டம், நாகலாந்து எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் டி எம் எல் ஏ தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக அம்மாநிலத்தின் பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து அந்த பகுதிக்கு தேடுதல் வேட்டைக்காக காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் பிரகாஷ் சோனாவால் தலைமையில் காவல்துறை அதிகாரிகள், அசாம் ரைபிள் படையை சேர்ந்த வீரர்கள் ஆகியோர் மொத்தமாக சென்றுள்ளனர்.

பாதுகாப்பு படையினர் தங்களை நெருங்கி வருவதை அறிந்த திமாசா  படையை சேர்ந்த தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்த தொடங்கி உள்ளனர். தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்துள்ளனர். தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில் 8 தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளதுடன் தீவிரவாதிகள் வைத்திருந்த துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும் அந்த இடத்திலிருந்து கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.