உலகப்புகழ் பெற்ற தென் மேரு என அழைக்கப்படும் தஞ்சை பெரிய கோயிலின் குடமுழுக்கு விழா 23 ஆண்டுகளுக்கு பின் இன்று நடக்கிறது. அனைத்து தமிழ் சொந்தங்களும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிகழ்வு இன்று அரங்கேற்றம். இதற்காக ஓராண்டுக்கும் மேலாக இந்திய தொல்லியல் துறையும், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் என பல்வேறு தரப்பினரும் தீவிர ஏற்பாடுகளை செய்து வந்தனர். இதன் விளைவாக கடந்த மாதம் 27ம் தேதி பூர்வாங்க பூஜையும், அடுத்து 31ம் தேதி வெண்ணாற்றங்கரை தஞ்சபுரீஸ்வரர் கோயிலில் இருந்து புனிதநீர் […]