மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் ஒரு பொது நிகழ்ச்சியில் பேசுகையில், ‘ இந்திய நாடு கிருஷ்ணர் பூமி. ஆதலால் நாட்டு பசுமாடுகளை நாங்கள் தெய்வமாக மதிக்கிறோம். இனியும் மதிப்போம். குழந்தை தாய்ப்பாலுக்கு அடுத்து பசும்பாலை தான் குடிக்கிறார்கள். ஆதலால் பசுவதையை நாங்கள் எதிர்க்கிறோம். நாட்டு பசும் பாலில் தங்கம் கலந்து இருக்கிறது. அதனால் தான் நாட்டு பசும்பால் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கிறது. நாட்டு பசுவின் காம்பில் சூரியவெளிச்சம் படும்போது அது தங்கமாக மாறுகிறது.’ […]