பாஜக -தேமுதிக கூட்டணி இடையே நீடிக்கும் இழுபறி!! முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் முக்கிய ஆலோசனை!!
பாமகவிற்கு இணையாக தேமுதிக தொகுதிகள் கேட்பதால் கூட்டணியில் சிக்கல் நீடிக்கிறது. இழுபறி நீடிக்கும் நிலையில் முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக பேச்சுவார்த்தையில் இருகட்சிகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் அதிமுக – பாஜக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.இதன் பின் பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக. நேற்று முன்தினம் மத்திய அமைச்சரும் தமிழக [...]