தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க ரூ.130 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு.!

தமிழக அரசு அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.130 கோடி நிதியுதவி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.130 கோடி நிதியுதவி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 15 வாரியங்களில் உள்ள 13 லட்சத்து 1,277 அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தலா ரூ.1,000 நிவாரணம் மீண்டும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கடந்த ஏப்ரல் 14 ஆம் முடிவடைய இருந்த ஊரடங்கு, இந்த மாதம் 30 வரை நீடிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
இதையடுத்து நேற்று முன்தினம் காணொளிக்காட்சி மூலம் பேசிய பிரதமர் மோடி கொரோன வைரஸ் தீவிரமடைந்து வருவதால் ஊரடங்கை நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை நீடிப்பதாக தெரிவித்திருந்தார். மேலும் ஏப்ரல் 20 க்கு பிறகு ஊரடங்கில் நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார். அதன்படி புதிய வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்ட்து. இந்த நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு நீடிப்பால் அமைப்புசாரா தொழிலார்களுக்கு ஏற்கனவே ரூ.1000 நிவாரணம் வழங்கப்பட்ட நிலையில், மீண்டும் ரூ.1000 வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025